பால் மாவின் விலையை குறைக்க முடியாது : அரசாங்கம்!!

301

Milk Powderபால் மாவின் விலையை குறைக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பால் மாவின் விலையை குறைக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பால் மா விலையை அரசாங்கமா குறைத்தது? பல்தேசிய நிறுவனங்களை எம்மைப் போன்ற நாடு ஒன்றினால் கட்டுப்படுத்த முடியாது.

பல்தேசிய நிறுவனங்கள் உலகின் பலம்பொருந்திய அரசாங்கங்களையே ஆட்டம் காணச்செய்கின்றன என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பல்தேசிய நிறுவனங்களுக்கு தேவையான வகையில் பால் விலையை உயர்த்த அனுமதிக்க முடியாது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சூளுரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.