மட்டக்களப்பில் தகாத முறையில் பிறந்த குழந்தையை நாய்க்கு இரையாக்கிய தாய்!!

566

மட்டக்களப்பில்..

உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. தாய்மையினை போற்றும் வகையில் நேற்று அன்னையர் தினம் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் அந்த தாய்மையினையே மிகவும் மலினப்படுத்தும் வகையிலான சம்பவம் ஒன்று மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைகட்டியவெளி பகுதியில் சமிளயடிவட்டை, கம்பியிறக்கம் பகுதியில் உள்ள கல் உற்பத்திசெய்யும் பகுதியில் பிரதேசத்தில் தகாத முறையில் குழந்தையை பிரசவித்த பெண்ணொருவர், அதனை நாய்க்கு இரையாக்கிய சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

நேற்றையதினம் மாலை 6 மணியளவில் கல்லுவாடியில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் நாய் ஒன்று இறந்த சிசு ஒன்றின் உடலை இழுத்துச் செல்வதை கண்டு கிராம உத்தியோகத்ததருக்கு தகவல் வழங்கியதையடுத்து சிசுவின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிசு தொடர்பில் குறித்த பகுதியை சேர்ந்த 40வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரை வெல்லாவெளி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த பெண்ணின் கணவர் கடந்த இரண்டு வருடங்களாக மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில் புரிந்துவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் மகனிற்கு பழக்கமான ஒருவராலேயே குறித்த பெண் கர்ப்பம் தரித்துள்ளாதகவும் அதற்கான உடலில் எந்தவிதமான தோற்றப்பாடு காணப்படாத நிலையில் சம்பவதினமான நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் வீட்டின் வளவின் 300 மீற்றர் தூரம் கொண்ட பகுதியில் யாருக்கும் தெரியாமல் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் அந்நபருக்கு தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும் அதனை எடுத்துச் செல்லுமாறு கையடக்க தொலைபேசியில் தெரிவித்துவிட்டு அங்கு இரவு 7 மணிவரை காத்திருந்துள்ளார்.

ஆனால் அவர் வராத நிலையில் தனது பிள்ளைகளுக்கு இந்த சிசு பிறந்தது தெரியக் கூடாது என பிறந்த சிசுவை அவ்விடத்திலே கைவிட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் நேற்றையதினம் காலையில் குழந்தையை கைவிட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது குழந்தை கா ணாமல் போயுள்ளதாகவும் இதன்போது அப்பகுதியில் நாய்கள் குறித்த குழந்தையினை இழுத்துச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிதித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் குறித்த பெண்ணுடன் தகாத உறவினைக்கொண்டிருந்த நபரினையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் மற்றும் மரண விசாரணை அதிகாரி,நீதிபதி ஆகியோரின் விசாரணைகளை தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

குறித்த சிசு மரணம் தொடர்பான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.