மறுப்பு தெரிவித்த 5 மருத்துவமனைகள் : முச்சக்கர வாகனத்தில் பிள்ளை பெற்ற கர்ப்பிணி!!

674

முச்சக்கர வாகனத்தில் பிள்ளை பெற்ற கர்ப்பிணி..

கொரோனா பிரச்சனையால் 5 மருத்துவமனைகள் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த நிலையில், முச்சக்கர வாகனத்தில் பிள்ளை பெற்றெடுத்துள்ளார். இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த 27 வயது பெண் ஒருவருக்கே இந்த மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் கோரேபாளையம் பகுதியில் குடியிருந்து வரும் இவர், பிரசவ வலியை அடுத்து சனிக்கிழமை இரவு தாயார் மற்றும் சகோதரருடன் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால் கொரோனா பரவல் இருப்பதால் புதிய நோயாளிகளை அனுமதிப்பதில்லை என மறுத்துள்ளனர். தொடர்ந்து இன்னொரு மருத்துவமனையிலும் இதே பதிலை அளித்துள்ளனர். இதேப்போன்று 5 மருத்துவமனைகளில் அந்த இரவு அவர்கள் அலைந்துள்ளனர்.

இறுதியில் இன்னொரு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சித்தாப்புரா பகுதியில் வைத்து அந்த முச்சக்கர வாகனத்தில் வைத்து குறித்த பெண் பிள்ளை பெற்றெடுத்துள்ளார்.

இதனிடையே, அமைப்பு ஒன்றின் உதவியுடன் பெங்களூருவில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.