கலந்துரையாடல்..
வவுனியாவில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இன்று (11.05.2020) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மகேந்திரன் தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன், தெற்கு வலய திட்டமிடல் பிரிவு பொறுப்பதிகாரி திருமதி சொரூபன், வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்திய ஆசிரியர்கள், சுகாதார துறை வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலை ஆரம்பிக்கும் போது பாடசாலைகளில் கொவிட் 19 தொடர்பில் உருவாக்கப்பட வேண்டிய கண்காணிப்பு குழு, பாடசாலைகளில் கொவிட் 19 தாக்கம் குறித்து பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள்,
மாணவர்கள் மத்தியில் அறிவுறுத்தப்பட வேண்டிய விடயங்கள், பாடசாலையிவல் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தெர்டர்பாக வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்களால் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.