கட்டாக்காலி மாடுகள்..
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கடந்த சில நாட்களாக கட்டாக்காலி மாடுகளினால் தினசரி வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன் போக்குவரத்துக்கும் இடையூராக காணப்பட்டு வந்த நிலையில் 40க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகளை வவுனியா நகரசபையினர் பிடித்துள்ளனர்.
வவுனியா நகரசபையினரால் நேற்றையதினம் (11.05.2019) இரவு 10 மணி முதல் இன்று (12.05.2019) அதிகாலை 4 மணிவரை வவுனிவவுனியா நகர், பட்டாணிச்சூர், வேப்பங்குளம், பண்டாரிக்குளம், திருநாவற்குளம், கோவிற்குளம் போன்ற பகுதிகளில் 40க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.
பிடிக்கப்பட்ட மாடுகள் வவுனியா நகரசபை வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிடிக்கப்பட்ட மாடுகளில் தண்டப்பணம் செலுத்தி பெற்றுக்கொண்ட மாடுகளும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 600ரூபா, தண்டம் 1000ரூபா, ஒர் நாள் பராமரிப்பு செலவு 300 ரூபா ஆகியவற்றினை செலுத்தி மாட்டை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பராமரிப்பு செலவு நாளாந்தம் 300ரூபா விதிக்கப்படுமென நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.