வவுனியாவில் வாகன வருமான வரி அனுமதிப் பத்திரம் பெற வரிசையில் காத்திருக்கும் மக்கள்!!

615

வாகன வருமான வரி அனுமதித் பத்திரம்..

வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் ஊடரங்கு தளர்த்தப்பட்டு மக்கள் வழமைக்கு திரும்பியதையடுத்து நேற்றையதினம் (11.05) தொடக்கம் பெரும்பாலான அரச சேவைகள் முழுமையாக இயங்க ஆரம்பித்துள்ளன.

இந் நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் (TAX) வழங்கும் காரியாலயத்தில் இன்று (12.05.2020) அதிகளவிலான மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

புதிதாக வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் பெறல் மற்றும் புதுப்பித்தல் , வாகன உடமை மாற்றம் போன்ற செயற்பாட்டிற்காக மக்கள் வருகை தந்திருந்தனர்.

கோவிட்-19 அ ச்சம் காரணமாக கடந்த நான்கு வாரத்திற்கு மேலாக காலாவதியான வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் செலுத்துபவர்களுக்கான தண்டப்பணம் அறவிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வவுனியா பிரதேச செயலகத்தினுள் வருகை தரும் மக்கள் அனைவருக்கும் தொற்று நீக்கி மருந்து தெளிப்பதுடன் கைகள் சுத்தம் செய்ததன் பின்னரே பிரதேச செயலகத்தினுள் அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.