வவுனியாவில் 5000ரூபா முதியோர் கொடுப்பனவில் மோசடி : அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு!!

712

அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓர் கிராம சேவையாளர் பிரிவில் 5000 ரூபா முதியோர் கொடுப்பனவில் மோ சடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து நாளைய தேசம் மக்கள் குறைகேள் அமைப்பினர் இன்றையதினம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் புகார் மனு ஒன்றை கையளித்தனர்.



குறித்த கிராம சேவையாளர் பிரிவில் 5000ரூபா முதியோர் கொடுப்பனவினை பெறுவதற்கு சென்ற சமயத்தில் கொடுப்பனவினை வழங்காது குறித்த கொடுப்பனவினை இரானுவத்தினரிடம் அனுப்பியுள்ளேன் அங்கு சென்று பெற்றுக்கொள்ளுமாறு கிராம சேவையாளர் தெரிவித்தார்.

அதன் பின்னர் பிரதேச செயலக கணக்காளரை வினாவிய சமயத்தில் அப்பணம் பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஆனால் பயனாளிக்கு அக் கொடுப்பணவு கிடைக்கப்பெறவிலை.

எனவே இவ்விடயத்தில் உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு நாளைய தேசம் மக்கள் குறைகேள் அமைப்பினர் அரசாங்க அதிபருக்கு வழங்கிய புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேனவிடம் வினவிய சமயத்தில் குறித்த கிராம சேவையாளர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.