பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு..
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட முன்னதாக கொரோனா வைரஸ் தொற்று பரவுகையில் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து மாணவ மாணவியரை தெளிவூட்ட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 வைரஸ் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட முன்னதாக இந்த பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனை வழிகாட்டல்கள் ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் கல்வி கற்ற மற்றும் தற்காலிக வீசா பெற்றுக்கொண்டிருந்த 3297 மாணவ, மாணவியர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படும் போது அதனால் அபாயங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.