நள்ளிரவில் கழிவறைக்கு சென்ற போது அலறிய பெண் : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

580

அதிர்ச்சி சம்பவம்..

தமிழகத்தில் நள்ளிரவு கழிவறைக்கு சென்ற பெண் பாம்பு கடித்து உ யிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கண்ணகி நகரில் வசித்து வருபவர் சுந்தர்ராஜன். அவரது மனைவி ஆதிலட்சுமி.

வழக்கம்போல் கணவன் மனைவி இரு குழந்தைகளுடன் நேற்றிரவு தூங்கிகொண்டிருந்த வேலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் வெளியே நாய் குலைக்கும் சத்தம் அதிகமாக எழும்பியதால் ஆதிலட்சுமி சுந்தரராஜன் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து என்னவென்று பார்த்துள்ளனர்.

அப்போது வடமாநிலத்தை சேர்ந்த இளைர்கள் சிலர் கையில் கம்புடன் பாம்பை தேடி வந்துள்ளனர். அப்பொழுது சுந்தர்ராஜனும் பாம்பை அடிக்க கம்பு வைத்து தேடியும் பாம்பு கிடைக்காததால் மனைவியை வீட்டிற்குள் செல்லும்படி கூறிவிட்டு மீண்டும் வடமாநில இளைஞர்களுடன் சேர்ந்து பாம்பை தேடியுள்ளார்.

ஆதிலட்சுமி கழிவறைக்கு சென்று வெளியே வந்துள்ளார். கழிவறைக்கு வெளியே இருந்த நல்ல பாம்பு ஆதிலட்சுமி காலில் கொத்தியுள்ளது. பாம்பு கொத்தியது மட்டுமல்லாமல் தனது காலில் பாம்பு சுற்றிக் கொண்டதால் ஆதிலட்சுமி கூ ச்சலிட்டுள்ளார்.

ஆதிலட்சுமி கூச்சல் ச த்தத்தை கேட்ட ப தறியபடி வந்த கணவர் மனைவியை பாம்பு கடித்துவிட்டதை உணர்ந்து அ திர்ச்சியடைந்தார். ஆனால் அவர் பாம்பை அடிக்க நினைப்பதற்குள் அது அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

அப்பகுதியினர் அனைவரும் வெளியே ஓடி வந்ததும் ஆதிலட்சுமியை காப்பாற்ற ஒரு சிலர் 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டுள்ளனர்.

பின்னர் சிலர் ஆதிலட்சுமியை கொத்திய பாம்பை வலைவீசி தேடியும் அந்த குடியிருப்பை சுற்றி எங்கும் பாம்பு கிடைக்காததால் மக்கள் அப்பகுதியில் மிகவும் பீ தியில் உள்ளனர். 108 ஆம்புலன்ஸ் கண்ணகி நகர் பகுதிக்கு வர வழி தெரியாததால் வெகுநேரம் கழித்து வந்தது.

ஆனால் அதற்குள் பொலிசார் உதவியுடன் ஆதிலட்சுமியை அவரின் கணவர் அதே பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் இரவு நேர பணியில் மருத்துவர் இல்லாததால் இங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.

பின்னர் சுந்தர்ராஜன் உறவினர்களுடன் ஆட்டோவில் ஆதிலட்சுமியை வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே ஆதிலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ஆதிலட்சுமி இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

தனது மனைவியின் இறப்புக்கு காரணம் 108 ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் சம்பவ இடத்தில் வராதே என்று உயிரிழந்த ஆதிலட்சுமியின் கணவரும் உறவினர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.