பல பெண்களை ஏமாற்றிய காசி..
தமிழகத்தை சேர்ந்த காசி என்ற இளைஞன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை சீ ரழித்து கைதான நிலையில் பெண்களுடன் அவர் பேசும் புதிய ஓடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் பணக்கார வீட்டு பெண்கள் தான் இவரிடம் சிக்கி சீரழிந்துள்ளனர். காசியிடம் விசாரணை நடந்து வருகிறது. காசி மறைத்து வைத்திருந்த லேப்டாப்பில் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆபாச வீடியோக்கள்,
போட்டோக்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இதனிடையே காசியின் ஓடியோக்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இவைகளை யார் வெளியிடுகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புதிய ஓடியோவில் காசி இளம் பெண்கள் உள்பட பல்வேறு நபர்களுடன் பேசுவது போன்று அந்த ஓடியோ உள்ளது. ஆனால் அதில் அவர் யாருடன் பேசுகிறார் என்ற விவரம் இல்லை. பெண்களை ஆ பாசமாக பேசி மி ரட்டுவதும், அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதுமாக இருந்தது.
அதில் பேசும் காசி, அந்த பெண்ணை நீ வேணும்னா யூஸ் பண்ணிக்கோ, எனக்கு பணமும் தந்து ரோட்டுக்கு வந்தும் இருக்காங்க. நமக்காக அந்த அளவுக்கு அடிமைங்க இருக்காங்க என்று பேசுவதும் பதிவாகி உள்ளது. அந்த குரல் காசியுடையதுதானா என உறுதியாக தெரியவில்லை.
எனினும் இந்த ஓடியோவை பொலிசில் ஒப்படைக்காமல் இப்படி பொதுவெளியில் வெளியிட்டது யார் என்ற வி சாரணை நடந்து வருகிறது. காசிக்கு வேண்டாதவர்கள் யாராவது இதை செய்துள்ளனரா என்றும் தெரியவில்லை.
அதேசமயம், காசி பற்றி இதுவரை 3 பெண்கள் புகார் தந்துள்ளனர். அதனால் புகார் தொடர்ந்து வருவதால், மற்ற பெண்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் இந்த ஓடியோ வெளியிடப்பட்டு இருக்கலாம் என்று பொலிசார் தரப்பில் கூறப்படுவதோடு காசியின் நண்பர்களே இதை செய்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.