நாட்டில் மழை சூழ்ந்த வானிலை நீடிக்கும்!!

648

வானிலை..

நாட்டில் நிலவும் மழை சூழ்ந்த வானிலை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி இன்று மாலையில் அல்லது இரவில் பல இடங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும். தென் மற்றும் மேற்குக்கரையோரப் பிரதேசங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

பல இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான மழையை எதிர்பார்க்கலாம். காலி- மட்டக்களப்பு கடற்பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழைபெய்யும்.

காங்கேசன்துறை- பொத்துவில் ஊடாக மன்னார், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் கடும் காற்று வீசும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.