வவுனியாவிலிருந்து வடமாகாணம் முழுவதும் சேவையில் ஈடுபடும் இ.போ.ச : மட்டுப்படுத்தப்பட்ட உள்ளுர் சேவை!!

712

இலங்கை போக்குவரத்து சபை..

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட உள்ளுர் சேவைகளிலும் மற்றும் வடமாகாணம் முழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன.

கொவிட் – 19 காரணமாக சுகாதார நடைமுறைகள் பின்பற்றி வவுனியாவிலிருந்து வடமாகாணத்திற்குட்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கிடையிலும்,

பாலமோட்டை , போகாஸ்வேவ, வீரபுரம் ஊடாக செட்டிக்குளம், பூவரசங்குளம் ஊடாக மெனிக்பாம் ஆகிய உள்ளூர் சேவைகளும் இடம்பெறுவதுடன்,

அரச, தனியார் உத்தியோகத்தர்கள் மற்றும் அனுபதிப்பத்திரம்(பாஸ்) உள்ளோர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டதுடன் பேரூந்துகளில் மட்டுப்படுத்தப்பட்ட பயணிகளுடன் சுகாதார நடைமுறைகள் பின்பற்றியே சேவைகள் இடம்பெறுகின்றன.

குறிப்பாக பேருந்துகளில் ஆசன ஒதுக்கீடு நடைமுறைகள் பின்பற்றப்படுவதுடன் அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.