கொரோனா வைரஸ்..
கொரோனா வைரஸ் ஆபத்து கா ரணமாக கடும் கட்டுப்பாடுகளை விதித்திருநத நாடுகள் அந்த கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்படுவது அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார். இவ்வாறான ஆபத்து அதிகரித்துள்ள நாடுகளாக சீனா, தென் கொரியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கடந்த வாரம் அடையாளப்படுத்தப்பட்டன.
கடும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் வழமையாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, வார இறுதியில் வைரஸ் தொற்றாளர்கள் குறிப்பிடத்தளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தென் கொரியாவில் மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் களியாட்டு விடுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவற்றை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சீனாவின் ஹூகான் நகரிலும் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நாடுகளில் மீண்டும் வைரஸ் பரவிய போதிலும் அதனை கட்டுப்படுத்த அந்நாடுகள் நடவடிக்கை எடுத்தமை குறித்து உலக சுகாதார அமைப்பு மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.