அமெரிக்காவிலிருந்து, ஐந்து இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போரினால் பாதிக்கப்பட்டவர்களே இவ்வாறு அமெரிக்காவில் அகதிக் கோரிக்கை முன்வைத்துள்ளனர். ஒவ்வொருவரும் தலா 55,000 அமெரிக்க டொலர்களை செலுத்தி மிகவும் கடினமான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவில் தரையிறங்கி சில மணித்தியாலத்திலேயே குறித்த இலங்கை அகதிகள் கோரிக்கையாளர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கடந்த 2010ம் ஆண்டு முதல் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக இவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் குறித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அமெரிக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறெனினும், இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால் சித்திரவதைகளை அனுபவிக்க நேரிடும் என அகதிக் கோரிக்கையாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஏழு நாடுகளைக் கடந்து அமெரிக்காவிற்குள் பிரவேசித்ததாக அகதிகள் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.





