கண்கலங்கி நிற்கும் பெற்றோர்..
ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உ யிரிழந்த 4 வயது மகனின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அனுமதி கோரியுள்ளனர் அவரது பெற்றோர்.
கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்த தம்பதியினர் கிருஷ்ணதாஸ்- திவ்யா, இவர்களுக்கு ஒரு மகளும், வைஷ்ணவ் என்ற 4 வயது மகனும் இருக்கின்றனர்.
தொழில் ரீதியாக UAE ல் செட்டிலான நிலையில், கடந்த 15 தினங்களுக்கு முன் வைஷ்ணவ் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
எந்த அறிகுறியும் தென்படாமல் சந்தோஷமாக ஓடியாடிக் கொண்டிருந்த வைஷ்ணவின் திடீர் சுகவீனத்தால் பெற்றோர்கள் கதிகலங்கி போயினர்.
இந்நிலையில் கீமேதெரபி சிகிச்சையும் பலனளிக்காமல் போகவே பரிதாபமாக வைஷ்ணவ் உ யிரழந்தார் . ஏற்கனவே அ திர்ச்சியில் இருந்த கிருஷ்ணதாஸ் தம்பதியினருக்கு இது பே ரடியாக இருந்தது.
இருப்பினும் தன்னுடைய மகனை சடங்குகளுடன் முறைப்படி கேரளாவுக்கு கொண்டு வந்து அடக்கம் செய்ய அதிகாரிகளின் அனுமதியை கோரியுள்ளதாக வைஷ்ணவின் மாமா தெரிவித்துள்ளார்.