வவுனியாவில் ம துபான நிலையங்களில் குவிந்த கூட்டம்!!

885

ம துபான நிலையங்களில்..

வவுனியாவில் அமைந்துள்ள ம துபான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து ம துபான நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கத்தினை கருத்தில் கொண்டு கடந்த இரண்டு மாதங்களிற்கும் மேலாக நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த திங்கள் கிழமை 23 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் நேற்றயதினம் ம துபான நிலையங்களை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியிருந்தது.

நீண்ட நாட்களின் பின்னர் ம துபான நிலையங்கள் திறக்கப்பட்டதால், வவுனியாவில் உள்ள ம துபான சாலைகளிற்கு முன்பாக குடிமகன்கள் அதிகமாக ஒன்றுகூடியிருந்தனர்.

இதேவேளை சில ம துபான நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து ம துபானத்தை கொள்வனவு செய்திருந்ததுடன் ஒவ்வொருவருக்கிடையில் சமூக இடைவெளியும் பேணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.