யாழில் கொட்டும் மழையிலும் ம துபானம் வாங்க வரிசையில் காத்திருந்த மக்கள்!!

544

யாழில்..

யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது ம துபானத்தை கொள்வனவு செய்ய பொதுமக்கள் காத்திருந்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக அனைத்து மதுபான நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை அரசாங்கத்தினால் ம துபானசாலைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, யாழ். குடாநாட்டில் உள்ள ம துபான நிலையங்களில் ம து பிரியர்கள் ம துபானத்தை கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சமூக இடைவெளியினை பின்பற்றி ம துபானத்தை கொள்வனவு செய்வதற்காக ம து பிரியர்கள் நீண்ட வரிசையில் வீதிகளில் நின்று மழைக்கு மத்தியிலும் தமக்கு தேவையான ம துபானத்தினை கொள்வனவு செய்தனர்.

ம துபான நிலையங்களுக்குள் ஒருவர் மட்டுமே சென்று ம துபானத்தை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்பட்டது. எனினும் ம துப் பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ம துபானத்தை கொள்வனவு செய்தனர்.