கொரோனா நோய்த் தொற்றை உலகிலிருந்து இல்லாதொழிக்க முடியாது : உலக சுகாதார ஸ்தாபனம்!!

489

கொரோனா நோய்..

கொரோனா வைரஸ் தொற்றை உலகிலிருந்து அடியோடு இல்லாதொழிக்க முடியாது என உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்வு கூறியுள்ளது.

எச்.ஐ.வீ வைரஸ் தொற்றைப் போன்று கொரோனா வைரஸ் தொற்றும் உலகில் நீடிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர நிலைமைகள் குறித்த நிபுணர் மைக் ரயன் காணொளிக் காட்சித் தொழிநுட்பத்தின் ஊடாக நடத்திய ஊடக சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என வெளியிடப்பட்டு வரும் எதிர்வு கூறல்கள், கருத்துக் கணிப்புக்கள் என்பனவற்றின் நம்பகத்தன்மை பற்றி உறுதிப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நோய்த் தொற்றுடன் மக்கள் இயல்பு வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டுமாயின் நோய்த் தொற்று ஓரளவேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு 100க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவற்றில் மிகவும் வெற்றிகரமான ஓர் தடுப்பூசியை உருவாக்குவது சிரமமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.