ஊரடங்கு உத்தரவு

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் நீடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணி முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் எதிர்வரும் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே மாதம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தளர்த்தப்பட்டதன் பின்னர் மே மாதம் 23 ஆம் திகதி சனிக்கிழமை வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





