விபச்சார வழக்கில் நடிகை புவனேஸ்வரிக்கு அபராதம்!!

674

buvaneswaryவிபச்சார வழக்கில் நடிகை புவனேஸ்வரிக்கு அபராதம் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பிரபல தமிழ் நடிகை புவனேஸ்வரி. பாய்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மும்பை பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியதாக கடந்த 2.10.2009 அன்று சென்னை விபசார தடுப்பு பிரிவு காவல்துறையினர் புவனேஸ்வரியை கைது செய்தனர்.

இந்த வழக்கு சைதாப்பேட்டை பெருநகர 4வது நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி சரவணன் முன் நடந்தது. இதில் 6 பேர் சாட்சியம் அளித்தனர்.

இந்த வழக்கில் நேற்று நீதிபதி சரவணன் தீர்ப்பு அளித்தார். அதில், நடிகை புவனேஸ்வரி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றம் புரிந்த புவனேஸ்வரிக்கு 3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் வேலுச்சாமி ஆஜராகி வாதிட்டார்.