கொரோனா வைரஸ்..
கொரோனா வைரஸ் ஒழிப்புத்திட்டத்தில் அடுத்த இரண்டு வாரங்கள் அவதானமாக இருக்கவேண்டிய வாரங்கள் என்று இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு வாரங்களுக்குள் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை கடைப்பிடித்தால் நாட்டை கொரோனாவில் இருந்து காப்பாற்றிக்கொள்ளமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவரான சவேந்திர சில்வா, தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து மாத்திரமே கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்படுவதாக தெரிவித்துள்ளார். சமூகப்பரவல் இன்னும் ஏற்படவில்லை.
இந்தநிலையில் இதுவரை மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களை இன்னும் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்தால், கொரோனாவை வெற்றிகொள்ளலாம் என்றும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்