அடைமழை..
நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் 150 மில்லி மீற்றருக்கும் அதிகம் மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிரதேசத்திற்கு அருகில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்த நிலைமைகள், அனர்த்த நிலை வரை அதிகரிக்க கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அது இன்றைய தினம் தெற்கு வங்காள விரிகுடாவில் சூறாவளி நிலைமை வரை அதிகரித்து வடமேல் நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது என திணைக்களம் கூறியுள்ளது.
அதன் தாக்கத்தின் காரணமாக, நாட்டில் தென்மேற்கு பகுதிகளில் மழையில் அதிகரிப்பு நிலை ஏற்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் நாடு முழுவதும் காற்று மணிக்கும் 40 – 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு, மேல் மாகாண, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும்.
ஏனைய பிரதேசங்களில் விசேடமாக ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெற்ற கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னலினால் ஆபத்துக்கள் ஏற்பட கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.