வவுனியாவில் திடீரென பற்றி எரிந்த வியாபார நிலையம் : பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிக்கிரை!!

958

வியாபார நிலையம்..

வவுனியா – சிறிராமபுரத்தில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்று தீப் பிடித்து எரிந்த சம்பவம் நேற்று (16.05.2020) இடம்பெற்றுள்ளது.

வவுனியா காத்தார் சின்னக்குளம் வீட்டுத்திட்டம் திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்திருந்த பல்பொருள் வியாபார நிலையமே நேற்று இரவு 8 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த வர்த்தக நிலையம் நேற்று இரவு மூடப்பட்டிருந்த நிலையில் இரவு 8 மணியளவில் மூடப்பட்ட கடையிலிருந்து புகை வெளிக்கிளம்பியுள்ளது.

அதனை அவதானித்த சிலர் தீயை அணைக்க முற்பட்டதுடன் நகரசபையின் தீயணைப்பு பிரவினருக்கும் தகவல் தெரிவித்திருந்தனர்.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எனினும் கடை முழுவதுமாக தீப்பற்றி எரிந்ததனால் கடையினுள் இருந்த பல லட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும்,

மின் ஒழுக்கினாலே இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.