யாழில்..
வடமராட்சி நெல்லியடியில் திருமணம் செய்து இரண்டு மாதங்களான இளம் பெண் ஒருவர் விபரீத முடிவால் பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது.
கரவெட்டி நெல்லியடி பகுதியில் ரூபன் கிருஷ்ணசாந்தி என்ற 17 வயது யுவதியே இன்று விபரீத முடிவு எடுத்து உயிரிழந்தார். திருமணம் செய்து இரண்டு மாதங்களாக கணவனுடன் முரண்பட்டுக் கொண்டு இருந்த நிலையில் இந்த விபரீதமான முடிவு எடுத்து உயிரை விட்டுள்ளார் என தெரிகின்றது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரனைகள் இடம்பெற்றுள்ளது மேலதிக விசாரனைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறு விடயங்களுக்கும் விபரீத முடிவுகளை எடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் தமிழ் பிரதேசங்களில் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.