கொரோனாவால்..
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் தொடர்ந்தும் ஒரு மாதத்திற்கு மேலாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்து வரும் நிலையில் காற்று மாசுப்படுவது குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஊரடங்குச் சட்டம் காரணமாக வாகனங்கள் பயன்படுத்தப்படுவது குறைந்தமை மற்றும் தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் குறைந்தமை காரணமாக வளிமண்டலத்தில் மாசு குறைந்துள்ளது என புவிசரிதவியல் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் வளிமண்டலத்தில் 50 வீதமாக மாசு குறைந்துள்ளது என அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட அறிவியலாளர் சரத் பிரேமசிறி கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக உலக வளிமண்டலத்தில் மாசு மற்றும் காபன்டை ஓக்சைட்டின் அளவு குறைந்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, வளிமண்டலத்தில் வெளிவிடப்படும் காபன்டை ஒக்சைட்டின் அளவு 50 வீதமாக குறைந்துள்ளதாக அமெரிக்காவின் நியூயோர்க்கை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.