கொழும்பு செட்டித் தெருவில் நபரை கடத்தி கப்பம் பெற்ற சந்தேகநபர் கைது!!

492

Arrestedபுறக்கோட்டை – செட்டியார்தெரு சாரங்கா ஜூவலரிக்கு அருகில் இராணுவ உடை அணிந்து வேன் ஒன்றில் நபர் ஒருவரை கடத்திச் சென்று 350 லட்சம் கப்பம் கோரிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2013-08-16ம் திகதி குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்ற நிலையில் சந்தேகநபர் நேற்று (04) குருநாகல் பகுதியில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, மூன்று ரவைகள், கப்பம் பெற்ற பணத்தில் கொள்வனவு செய்த வேன், வாரியபொல பகுதியில் திருடிய மோட்டார் சைக்கிள் என்பவை மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.