பொலிஸார் விசாரணை..
முள்ளிவாய்க்கால் பேரவல 11ம் ஆண்டு நினைவேந்தல் வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று (18.05.2020) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முடிவடைந்த சிறிது நேரத்தில் ஆலயத்திற்கு வருகைத்தந்த பொலிஸார் நினைவேந்தலை ஒழுங்குபடுத்தியவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவர்களின் பெயர் விபரங்களையும் பதிவு செய்தனர்.
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மக்களை ஒன்று கூட்டுவது தவறு என தெரிவித்ததுடன் முகமூடி அணித்து பூஜைகளை மேற்கொள்ளுமாறும் அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொண்டவர்களின் பெயர், விலாசங்களை கேட்டு பதிவினை மேற்கொண்டனர்.
மேலும் கருமாரி அம்மன் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் பேரவல 11 ம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்ற சமயத்தில் ஆலயத்தினை சூழ புலனாய்வாளர்கள், சிவில் உடையில் பொலிஸார் என 20க்கு மேற்பட்டவர்கள் நின்றதனை அவதானிக்ககூடியதாவிருந்தது.