வவுனியா நகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : மக்களை விரட்டிய பொலிஸ்!!

218


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..


வவுனியா நகரசபையில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபிக்கு முன்னால் இன்று (18.05.2020) காலை 10.30 மணிக்கு நகரசபையின் தவிசாளர் ஆர்.கௌதமன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.இறுதிப் போ ரின் போது உ யிர்நீத்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து உறவுகளின் ஆத்ம சாந்திக்காக மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.


இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி உரை இடம்பெறவிருந்த சமயத்தில் நிகழ்வு இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் நிகழ்வினை தலைமையேற்று நடாத்திய நகரசபை தவிசாளர் ஆர்.கௌதமனை அழைத்து பொலிஸார் எ ச்சரித்தனர்.

இவ்வாறான நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு தளர்ப்படும் சமயங்களில் அடையாள அட்டை நடைமுறையில் உள்ளமையினால் உடனடியாக இதனை நிறுத்துமாறு பொலிஸார் நகரசபை தவிசாளரை எ ச்சரித்தனர்.

இதனையடுத்து மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் அஞ்சலியுடன் நிகழ்வுகள் நிறுத்தப்பட்டதுடன் இறுதியில் அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்ட பூவினை நகரசபை ஊழியர் ஒருவர் அஞ்சலி இடத்தில் வைத்ததனை அவதானிக்ககூடியதாகவிருந்தது.