திறக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் இன்று முதல் பொலிஸார் சோதனை!!

526

தனியார் மற்றும் அரச நிறுவனங்களில்..

நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்று முதல் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுகாதார பாதுகாப்பு முறை கடைபிடிக்கப்படுகின்றதா என்ற சோதனை இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சோதனையிட வருபவர்களுக்கு உதவுமாறு அவர் நிறுவனங்களின் பிரதானிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் திறக்கப்பட்டுள்ள ஆடை தொழிற்சாலைகளை சோதனையிடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.