பிறந்த குழந்தையைக் கொலை செய்த பெற்றோர் கைது!!

515

Babyபிறந்த உடனே குழந்தையை கொலை செய்த கணவன், மனைவியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மனைவிக்கு பிறந்த குழந்தையின் முகத்தை துணியினால் மூடி கழுத்தை இறுக்கி சந்தேக நபர் கொலை செய்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட சிசுவின் உடல் ராஜாங்கன யாய 14 பிரதேசத்தில் எவரும் பயன்படுத்தாத இடம் ஒன்றில் இருந்து பொலிஸார் கைப்பற்றினர்.

சம்பவம் குறித்து கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 35 வயதானவர்கள் எனவும் இவர்கள் கெமுனுபுர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.