மணிக்கு 120 மைல் வேகத்தில் பறந்த மோட்டார் சைக்கிளிலிருந்து குதித்த இளம்பெண்!!

10


இளம்பெண்.


ரஷ்யாவில் சாலையில் மணிக்கு 120 மைல் வேகத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்றுகொண்டிருந்தார் ஒரு இளம்பெண். அப்போது திடீரென அவரது மோட்டார் சைக்கிள் தடுமாறத்துவங்க, ஓடும் மோட்டார் சைக்கிளிலிருந்து குதித்துவிட்டார் அவர்.Angelina என்ற தனது 20 வயதுகளிலிருக்கும் அந்த இளம்பெண் கீழே விழுவது, அவரது ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவாகியுள்ளது.


கீழே விழுந்து, என்னால் நகர முடியவில்லை, ஆம்புலன்சை அழையுங்கள் என்று அவர் முனக, அவர் விழுந்த வேகத்தை கவனித்துக்கொண்டிருந்த மக்கள் அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்று எண்ணி, அவரை அசையாமல் படுத்திருக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.


சாலை பந்தயங்களில் ஈடுபடும் வழக்கம் உடைய Angelina, ஒரு காருடன் போட்டி போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக கூறப்படுகிறது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Angelina உயிர் பிழைக்கமாட்டார் என மற்றவர்கள் எண்ணிக்கொண்டிருக்க, அவரோ பேண்டேஜ் போட்ட தனது உடலைக் காட்டி செல்பி எடுத்துக்கொண்டிருக்கிறார்.

அவரது உடலில் கைகள், கால்கள் மற்றும் பின்புறத்தில் தோல் பிய்ந்து போயிருக்கிறது. அவ்வளவுதான், மற்றபடி அவருக்கு ஒரு எலும்பு முறிவு கூட இல்லை. நல்ல வேளை என் பின் புறம் பத்திரமாக இருக்கிறது என்று ஜோக்கடித்துக்கொண்டிருக்கிறார் Angelina.