கொரோனா அச்சுறுத்தலையும் தாண்டி சர்வதேச புகழ்பெற்ற இலங்கை திருமணம்!!

622

இலங்கை திருமணம்..

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கை சிறப்பான திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் மாலிம்பட என்னும் பிரதேசத்தை சேர்ந்த தர்ஷன மற்றும் பவனி ஆகிய இருவருக்குமே திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தம்பதிக்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனினும் நாட்டில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திருமணத்தை தாமதப்படுத்த நேரிட்டது. எனினும் திருமணத்தை பிற்போடுவற்கு பதிலாக வேறு வகையில் நடத்த திட்டமிட்டனர்.

அதற்கமைய திருமண சம்பிரதாயங்களை மாத்திரம் செய்துவிட்டு திருமண வைபவத்திற்கான பணத்தில் பிரதேசத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய இருவரும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருமண ஆடையுடனேயே உதவிகளை செய்த இந்த தம்பதியின் செயலை பிரபல சர்வதேச ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.