அம்பான் சூறாவளி காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்று அடைமழை!!

555

அடைமழை..

அம்பான் சூறாவளி திருகோணமலைக்கு அப்பால் 900 கிலோமீற்றர் தொலைவில் நேற்று இரவு 11.30க்கு மையம் கொண்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது இன்று 20ம் திகதி பிற்பகல் வேளையில் வடக்கு, வடகிழக்கு கரையின் ஊடாக மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடும். இதன்காரணமாக இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும். மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

தென்,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும். வட மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.