தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இன்று (05.02) 81வது பிறந்த நாளைக் கொண்டாடும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கு தொலைபேசி மூலமாகவே ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ள இரா.சம்பந்தனை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன், மருத்துவ சிகிச்சைகளை முடித்துவிட்டு நாடு திரும்பியதும் இருவரும் நேரில் சந்தித்து கலந்துரையாட வேண்டும் என தெரிவித்ததாக நம்பகமான வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் விரைவில் சந்திப்பு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





