தீவிரமடையும் அம்பான் சூறாவளி : 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அ பாய எ ச்சரிக்கை!!

671

அ பாய எ ச்சரிக்கை..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு அ பாய எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

காலி, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அ பாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஏற்பட்ட தாழமுக்கம் அம்பான் சூறாவளியாக உருமாறியுள்ளமையினால் இந்த அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தாழமுக்கம் தீவிரமடைந்த நிலையில், வடக்கு மற்றும் வடமேற்கு கடற்பரப்பு வழியாக நகர்ந்து செல்லும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.