கொரோனா..
இந்தயாவில் நாடு முழுவதும் சுமார் 1,00,000க்கும் மேற்பட்டேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் சுகாதார மற்றும் நல அமைச்சகம் அறிவித்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 1,01,139 ஆக உள்ளது.
இதில் 3,163 இறப்புகள் உள்ளன, மொத்தம் 39,173 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. வைரஸிற்கான 2,404,267 சோதனைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவியதை தொடர்ந்து மார்ச் 24ம் திகதி முதல் தற்போது வரை இந்தியாவில் ஊரடங்கு தொடர்கிறது. கொரோனாவின் தீவிரத்திற்கு எற்றவாறு குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 33,000க்கும் மேற்பட்ட வழக்குகளும், 1,198 இறப்புகளும் பதிவாகியுள்ளன.