இளம் குடும்பஸ்தர்..
முகநூலில் பரப்பட்ட தகவலினால், குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணம் நாவற்குழி பாலத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமணமாகி ஒரு குழந்தையின் தந்தையாரான குறித்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக, முகநூல் கணக்கில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஏற்பட்ட மனவிரக்தியில் இந்த த ற்கொ லை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம்,செம்மணிப் பகுதியில் ஏ-9 வீதியோரமாக உள்ள அரச மரமொன்றிலேயே அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை குறித்த சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள், சாவகச்சேரி பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சாவகச்சேரியில் உள்ள புகைப்பரிசோதனை நிலையம் ஒன்றில் பணிபுரியும், கல்வியங்காட்டைச் சேர்ந்த இராசு தீபன் (வயது-28) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வருகின்றது.
குறித்த நபர் தொடர்பில் நேற்று முன்தினம் பேஸ்புக் ஒன்றில் இன்னொரு பெண்ணுடன் தவறாக இருக்கும் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்ததுடன், புகைப்பட ஆதாரங்களும் அதில் பதிவிடப்பட்டிருந்தது. இதனால் ஏற்பட்ட மன விரக்தியே இவர் த ற்கொ லை செய்து கொள்ளக் காரணமாக இருக்கலாம் என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) சட லமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.