சவுதி அரேபியாவில் கொலைக் குற்றவாளிகள் இருவரின் தலை துண்டிக்கப்பட்டமைக்கு ஐ.நா. மனித உரிமை அமைப்பு கண்டனம்!!

452

head cut

சவுதி அரேபியாவில் கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல், மத அவமதிப்பு ஆகிய குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், மேற்கிலுள்ள டாய்ப் நகரை சேர்ந்த அப்துலெல்லா அல் ஒடாய்பி என்பவர் சக பழங்குடியினத்தவரை குத்திக்கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதுபோன்று தென்கிழக்கிலுள்ள அசிர் பகுதியை சேர்ந்த நசிர்-அல்-கடானி, அயெத்-அல்-கடானி என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.



இவர்கள் மீதான கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து நேற்று அவர்களின் தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதையடுத்து இந்த ஆண்டில் இதுவரை மட்டும் 7 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் 78 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து சவுதியில் மரண தண்டனை அதிகம் நிறைவேற்றப்படுவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.