வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு புதிய நடைமுறை அறிமுகம்!!

738

புதிய நடைமுறை அறிமுகம்..

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. உள்வரும் விமான பயணிகளுக்கு தங்களின் பயண இலக்கிற்கமைய தறையிறங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதற்கமைய கட்டுநாயக்க, மத்தல, யாழ்ப்பாணம் மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணிகளுக்காக இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் போக்குவரத்து நெரிசல்களை குறைத்து, பாதுகாப்பான முறை ஊடாக மிகவும் பலனுடைய மற்றும் திறமையான சேவை ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த யோசனைக்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

குறித்த புதிய வேலைத்திட்டங்களுக்கமைய பயணிகள் நாட்டில் தரையிறங்குவதற்கு முன்னர் உரிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தி வைத்தல், விமான ஒன்று இலங்கைக்கு வருவதென்றால் அரை மணி நேரத்திற்குள் பெயர் பட்டியல் ஒன்று விமான நிலைய அதிகாரிக்கு வழங்குதல்,

அனைத்து பயணிகளுக்கு கிருமி நாசினி தெளித்தல், கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை பெறல், பயணிகளை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புதல்,

விமான நிலையங்களுக்கு அடிக்கடி கிருமி நாசினி தெளித்தல் மற்றும் சமூக இடைவெளியை பாதுகாத்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.