பொதுத் தேர்தலை நடத்தச் சாத்தியமில்லை : உயர் நீதிமன்றுக்கு அறிவித்தது தேர்தல் ஆணைக்குழு!!

451

பொதுத் தேர்தலை நடத்தச் சாத்தியமில்லை..

எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தக்கூடிய சூழ்நிலை கிடையாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாட்டில் தேர்தலை நடத்தக் கூடிய சூழ்நிலைகள் கிடையாது எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு, இந்த விடயத்தை உச்ச நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது. தேர்தலை நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அவை பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்தக் கூடிய சூழ்நிலை கிடையாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.