மாணவர்களுக்கு முகக் கவசம் அணிவது தொடர்பில் விசேட வைத்தியர் வெளியிட்ட தகவல்!!

722

ணவர்களுக்கு முகக் கவசம்..

பாடசாலை மாணவர்களுக்கு முக கவசம் அணிய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பிரதி சுகாதார இயக்குனர் நாயகம் விசேட வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் தொடர்ந்து முக கவசம் அணிந்தால் மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்படும். அத்துடன் அலர்சி போன்ற நோய்கள் ஏற்பட கூடும். உரிய மருத்துவ முறையிலான முக கவசத்திற்கு பதிலாக பல்வேறு முக கவசங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமையே அதற்கு காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பாடசாலைக்கு வரும் போதும் பாடசாலையில் இருந்து செல்லும் போதும் அவசியம் ஏற்பட்டால் மாத்திரம் முக கவசம் அணிவிக்க பெற்றோர் தீர்மானிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் பாடசாலைகள் ஆரம்பித்த பின்னர் மாணவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.