சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக்கால எல்லை நீடிப்பு!!

1110

சாரதி அனுமதிப்பத்திரம்..

சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக்கால எல்லையை மேலும் நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜூலை 31வரை காலஎல்லையை நீடிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 30 இல் முடிவடையும் நிலையில் இருந்த சாரதி அனுமதிப்பத்திரம் மே 31வரை நீடிக்கப்பட்டது.

எனினும் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு அதனை ஜூலை 31வரை நீடித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.