இலங்கையில் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!!

10


ஊரடங்கு உத்தரவு..


நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன்னர் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26ஆம் திகதி) முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.குறித்த தினம் முதல் நாடு முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது மறு அறிவித்தல் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை எதிர்வரும் 26ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேநேரம், எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.