வவுனியாவில் காட்டில் தனிமையில் நின்ற ஒரு மாத யானைக் குட்டி மீட்பு!!

24


ஒரு மாத யானைக் குட்டி..


வவுனியா போகஸ்வெவ – பதவியா பிரதான வீதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் தனிமையில் நின்ற ஒரு மாத குட்டி யானை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் மீட்கப்பட்டுள்ளது.குறித்த காட்டுப்பகுதியில் தனிமையில் ஒர் யானைக்குட்டி நிற்பதாக இன்று (24.05) அதிகாலை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு கிடைத்த தகவலையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினர்,


அவ்விடத்தில் வேறு யானை நிற்கின்றதா என ஆராய்ந்த பின்னர் தனிமையில் நின்ற குட்டி யானையினை மீட்டு வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.


ஒரு மாதமாகிய குறித்த குட்டி யானைக்கு மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

வவுனியா குட்டி யானை நேரலையாக

Posted by Vavuniyanet.com on Sabtu, 23 Mei 2020