மருதானையில் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 26 பெண்கள் உட்பட 31 பேர் கைது!!

409

PROSTITUTIONமருதானை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் விபச்சார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 26 பெண்கள் உட்பட 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மருதானை – வஜிரானந்த மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, 10 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

நேற்று (05) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் விபச்சார விடுதியை நடத்திச் சென்ற இருவரும் அதற்கு உதவியாக இருந்த 8 பெண்களுமே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களான எட்டுப் பெண்களும் 21 – 31 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

அத்துடன் இவர்கள் தேவிநுவர, ஹட்டன், இறக்குவானை, அவிசாவளை, கந்தப்பொல, கல்முனை, இரத்மலானை, வரக்காபொல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.



இதேவேளை, மருதானை – டெக்கிக்கல் சந்தி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் கைதான குறித்த பெண்கள் 26 – 44 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்கள் கலுபோவில, கடுவெல, மருதானை, மதவாச்சி, நுவரெலியா, வாழைத்தோட்டம், கலவகெலே, போரல்லை, வடகொட, மினுவான்கொடை, ரத்மலானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

மேலும் மருதானை – பஞ்சிகாவத்தை வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, விபச்சார விடுதி நடத்தி வந்த தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அவருக்கு உதவியாக இருந்த ஐந்து பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் கைதான குறித்த பெண்கள் நுவரெலியா, கிரான்பாஸ், பேலியகொட, அவிசாவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25- 45 வயதானவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் அனைவரும் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.