இலங்கையில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு எப்போது அழைக்கப்படுவார்கள்? கல்வி அமைச்சரின் தகவல்!!

1172

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில்..

இலங்கையில் மிகவும் பாதுகாப்பான நேரத்திலேயே மீண்டும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது காணப்படும் நிலைமை என்னவென வினவிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினம் தொடர்பில் தற்போது உறுதியாக எதனையும் கூற முடியாது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான முதலாவது போ ராட்டமாகவே நாங்கள் பாடசாலைகளை மூடினோம்.

இலங்கையை சேர்ந்த தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டு 48 மணிநேரத்துக்குள் இந்த முடிவை நாங்கள் எடுத்தோம். பிள்ளைகளை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றின் இறுதி போ ராட்டம் தான் பிள்ளைகளை மீண்டும் பாடசாலைக்கு அழைத்து வருவதாகும். கொரோனா தடுப்பின் முதல் நடவடிக்கை பாடசாலை மூடப்பட்டதாகும். இறுதி நடவடிக்கை பாடசாலைகளை ஆரம்பிப்பதாகும்.

ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்ற அழிவை பாருங்கள். ஐரோப்பிய நாடுகளை நாங்கள் சொர்க்க நாடுகள் என்று கருதினோம்.

குறிப்பாக இத்தாலியில் முதல் 1000 உயிரிழப்புக்களின் பின்னரே பாடசாலைகள் மூடப்பட்டன. மிகவும் பாதுகாப்பான நேரத்திலேயே மீண்டும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.