சுடச்சுட மலைப்பாம்பு பிட்ஸா -புளோரிடாவில் கலைகட்டும் வியாபாரம்!!

464

Pizzaஇத்தாலி நாட்டின் பிரபல உணவு வகைகளில் ஒன்றான பிட்ஸா உலகின் பல நாடுகளில் வாழும் மக்களின் மிகவும் விருப்பமான உணவுகளின் பட்டியலில் சிறப்பிடம் வகித்து வருகிறது.

இதற்கு முன்பு வரை சைவ, தவளை, முதலை அடங்களாக அசைவ பிட்ஸாக்களை தின்று சலித்து விட்ட மக்களுக்கு ஃப்ளோரிடாவில் உள்ள பிரபல பிட்ஸா நிறுவனம் தற்போது சுடச்சுட மலைப்பாம்பு பிட்ஸாக்களை பரிமாறி பரவசப்படுத்துகிறது.

இதற்காக பர்மா மலைப்பாம்பு என்ற வகை பாம்புகளை வெட்டி, அவற்றை அரை வேக்காடாக அவித்து, பின்னர் மசாலா பொருட்களுடன் கலந்து பொரித்து, ஒவ்வொரு பிட்சாவுக்குள்ளும் ஒரு மலைப்பாம்பு துண்டு இருக்கும் வகையில் ஃப்ளோரிடா மக்களை இந்நிறுவனத்தின் உரிமையாளர் இவான் டானியேல் மகிழ்வித்து வருகிறார்.

இந்த பிட்ஸாவுக்காக அவர் கொள்முதல் செய்யும் மலைப்பாம்புகள் சுமார் 20 அடி நீளம் கொண்டவை என தெரிகிறது. இதற்கான மலைப்பாம்பு இறைச்சியை வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்வதாக பெருமையுடன் கூறும் இவர், தனது புது வகை பிட்ஸாவை 45 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்கிறார்.



இதனால், இவரது கடையில் எப்போதும் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது. இந்த புதிய மெனுவை தொடர்ந்து ருசிக்க வரும் வாடிக்கையாளர்களில் ஒருவர் பிட்ஸாவின் உள்ளே இருக்கும் இறைச்சி கோழிக்கறியைப் போல் சுவையாக உள்ளது. ஆனால், மிகவும் கஷ்டப்பட்டு மென்று தின்ன வேண்டியுள்ளது. இன்னும் கொஞ்சம் மிருதுவாக அவித்தால் நல்லது என்று கூறுகிறார்.