விஷப் பாம்புகள் குறித்து இணையத்தில் தேடிய கணவன் : இளம் தாயார் ம ரணத்தில் அ திர்ச்சித் திருப்பம்!!

639

விஷப் பாம்புகள் குறித்து..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளம் தாயார் பா ம்பு க டித்து இ றந்த சம்பவம் தொடர்பில் வி சாரணை மேற்கொண்டுவரும் பொலிசாருக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் பகுதியை சேர்ந்த 25 வயது உத்ரா என்பவரின் மரணம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்ராவின் கணவர் சூரஜ் என்பவரை சுற்றியே தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சூரஜ் ஆபத்தான பா ம்புகள் தொடர்பில் இணையத்தில் தகவல் சேகரித்ததாகவும், இவர் பா ம்புகளை உ யிருடன் பி டிக்கவும், அதை பத்திரமாக பா துகாக்கவும் தெரிந்த நபர் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் பா ம்புகள் பி டிப்போருடன் இவருக்கு தொடர்புள்ளனவா என்பது குறித்தும், பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்களது ம களை தி ட்டமிட்டு கொ லை செய்தது சூரஜ் என உத்ராவின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையிலேயே தற்போது வி சாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் நடந்த அன்று படுக்கை அறையின் ஜன்னல் திறந்த நிலையில் இருந்ததாகவும், அது வழியாக உள்ளே புகுந்த பா ம்பு உத்ராவை க டித்திருக்கலாம் என முதலில் கருதப்பட்டது.

ஆனால், குளிரூட்டப்பட்ட அறையில், படுக்கையில் கிடந்த உத்ராவை பா ம்பு க டித்த சம்பவம் நம்பும் வகையில் இல்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி பகல் ஒரு குழந்தையின் தாயாரான உத்ராவை படுக்கை அறையில் இ றந்த நி லையில் மீ ட்டுள்ளனர். தொடர்ந்து அறையில் பதுங்கியிருந்த விஷ நாகம் ஒன்றையும் பொதுமக்கள் கொ ன்றுள்ளனர்.

மார்ச் 2 அன்று சூரஜின் குடியிருப்பில் வைத்து உத்ராவை பா ம்பு க டித்த நிலையில், அது தொடர்பான சிகிச்சையில் இருந்துவந்த உத்ராவை மீண்டும் பா ம்பு கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.