இளம் குடும்பஸ்தர்..
வவுனியா, புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்துள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி (15.05.2020) வவுனியா, குருமன்காடு பகுதியில் இருந்து நகர் நோக்கி புகையிரத நிலைய வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பயணித்த போது,
எதிர் திசையில் பயணித்த பாரவூர்தி ஒன்றுடன் மோதி அதே திசையில் பயணித்த பட்டா ரக வாகனத்துடனும் மோதி மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைநடத நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வவுனியா, திருநாவற்குளத்தைச் சேர்ந்த கிறிஸ்ரி (வயது 39) என்ற இளம் குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார்.
காயமடைந்த மற்றை நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.