நாளை முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எ ச்சரிக்கை!!

485

பொலிஸார் எ ச்சரிக்கை..

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டவுடன் நாளை முதல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் எ ச்சரித்துள்ளனர். பிரதி பொலிஸ்மா அதிபா அஜித் ரோஹன இதனை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

வரிசையில் நிற்கும்போது அல்லது பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு 6 மாத சி றைத்தண் டனையை வழங்க சட்டத்தில் இடமுண்டு என்றும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பேருந்துகளில் நாளை முதல் ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகள் ஏற்றப்படுவர் என போக்குவரத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்வோருக்கு எ திராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-